நடிகை கஸ்தூரி சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் மற்றும் பொதுவான அனைத்து சென்சிடிவ் பிரச்சினைகளிலும் தனது தெளிவான கருத்துக்களை எடுத்துரைப்பவர். சமூக வலைதளங்கள் ,டிவி விவாதங்கள் அனைத்திலும் இவர் வாதம் தூள் பறக்கும்.

இந்நிலையில் நண்பர்கள் தினத்தை ஒட்டி ஒரு பதிவை அவர் டுவிட்டரில் இட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது என்னவென்றால்,

இரண்டு வருடங்களுக்கு முன்பு மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்ய கூட நினைத்திருந்தாராம் கஸ்தூரி

மேலும் பல உறவினர்கள் ஏமாற்றினாலும், பலர் முதுகில் குத்தினாலும் சில நண்பர்கள் இவர் பக்கம் இருந்தார்களாம். அவர்களுக்கு நண்பர்கள் தினத்தில் கஸ்தூரி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இணையதள நண்பர்களும் கருத்து தெரிவிக்கும் நபர்களும் தான் இவரை மனஅழுத்தத்தில் இருந்து மீட்க முக்கிய காரணமாம்.இதனால் ட்விட்டர் வாசிகளுக்கும் கஸ்தூரி நன்றி தெரிவித்துளளார்.