டிடி என்கிற திவ்யதர்ஷினி.இந்த பயரை தெரியாதவர்கள் இருப்பார்களா என்ன?. விஜய் டீவியில் காபி வித் டிடி நிகழ்ச்சி அவருக்கு பெரிய ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி தந்தது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் மிக பிரபலம்.டிடி கேட்டு யாரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் என்று கூறியது கிடையாது. அந்த அளவிற்கு செல்வாக்கில் உள்ளார்.   இந்த நிகழ்ச்சி தற்போது சில மாற்றங்களுடன்  அன்புடன் டிடி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி அன்புடன் டிடி  நிகழ்ச்சிக்கு போட்டியாக ஒரு நிகழ்ச்சியை இன்று ஒளிபரப்புகிறது.  ஒவ்பொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை சுஹாசினி தொகுத்து வழங்குகிறார். வழக்கமாக திரைத்துறையினருடன் பேட்டி என்றில்லாமல் அவர்களது வாழ்க்கையை திரும்பி பார்க்கும் வகையில் வித்யாசமானதாக இருக்கும் என்று சுகாசினி கூறினார்.