இதுவரை வெளிவராத மணிரத்னத்தின் ரகசியத்தை வெளியிட்ட சுஹாசினி

பிரபல இயக்குனர் மணிரத்னம் இதுவரை எந்த ஒரு படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்ததில்லை என்றும், அவர் நேராக ‘பல்லவி அனுபல்லவி’ என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் என்றுதான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம்.

ஆனால் மணிரத்னம் ஒரே ஒரு படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளதாக நடிகையும் அவரது மனைவியுமான சுஹாசினி தெரிவித்துள்ளார். விஷ்ணுவர்தன், அம்ப்ரீஷ், லட்சுமி நடித்த ரவிபந்துலி இயக்கிய கன்னட படம் ஒன்றில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளாராம்.

இந்த படத்தில் அவருடன் இயக்குனர் எஸ்.பாலசந்தரின் மகனும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது