பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் செல்கிறது. இந்த நிலையில்  நேற்று பலூன் உடைக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது சுஜாவுடன் சினேகன் கடுமையாக மோதினார். இதியடுத்து கணேஷிடம் சுஜா, நீங்கள் பிந்துவிடம் விளையாடும்போது தவறாக கை எங்கும் பட்டுவிடக் கூடாது என்று எச்சரிக்கையுடன் விளையாடினீர்கள். ஆனால் சினேகன் அப்படி இல்லை. ஏற்கெனாவே ஒரு விளையாட்டின்போது பிந்து சினேகனிடமிருந்து சண்டையிட்டு விலகிய காரணம் இப்போதுதான் புரிகிறது என்றார்.
இதன்மூலம் சினேகன் மீது புதிய குற்றச்சாட்டை சுஜா வைத்துள்ளார்.