நேற்று உலகெங்கும் காதலர்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் காதல் அனுபவம் குறித்து நடிகை சுஜா சொல்வதைக் கேளுங்க.

இதுவரை நாங்கள் காதலில் சொதப்பிய சம்பவமெல்லாம் எதுவும் இல்லை. ஆனால் ஒரு முறை காதலர் தினத்தை குடும்பத்தோடு கொண்டாடினோம். அதுதான் சொதப்பல் என்று நினைக்கிறேன்.

எனக்கு வித்தியாசமான விநாயகர் பொம்மைகளைச் சேர்த்து வைப்பது பிடிக்கும் என்பதால் அவர் செம்பருத்தி பூ மேல் விநாயகர் உட்கார்ந்து இருப்பது போல் ஒரு பொம்மை கொடுத்தார், அவர் எனக்கு கொடுத்த முதல் பரிசு.

நான் அவருக்கு பரிசு கொடுக்க என்னென்னவோ யோசித்து கடைசியில் இரண்டு பறவைகள் சேர்ந்து பறக்கிறது போல் ஒரு பொம்மையை பரிசாக கொடுத்தேன் என்றார்.