ஓவியாவாக மாற முயலும் சுஜா வருணி….

06:05 மணி

பிக்பாஸ் வீட்டில் புதிதாக நுழைந்துள்ள நடிகை சுஜா வருணி, நடிகை ஓவியாவை  காப்பியடிப்பது போல நடந்து கொள்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் ஓவியா இருந்த போது அவரின் வெளிப்படைத் தன்மை, முகத்திற்கு நேராக பேசுவது, மனதில் பட்டதை செய்வது, எப்போதும் சந்தோஷமாக சிரித்த முகத்துடன் இருப்பது என கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார். அதனாலேயே அவருக்கு அதிக ஓட்டுகள் விழுந்தது.

பிக்பாஸ் அறையில் ஒரு முறை பேசும் போது ‘சில பாடல்களை போட வேண்டாம். அந்த பாடலை கேட்டால் அம்மா நினைவு வருகிறது. அன்பு, பாசம் இதெல்லாம் எனக்கு பெருசா கிடைக்கல’ என சோகமாக பேசி கண்ணீர் வடித்தார். அவரின் அந்த பேச்சு பலரையும் உலுக்கியது.

இந்நிலையில் புதிதான கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ள நடிகை சுஜா வருணி, நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், தனியறையில் பிக்பாஸிடம் பேசும் போது தனது சொந்த பிரச்சனைகள் பற்றியே பேசினார் ‘குடும்ப பிரச்சனை காரணமாக சினிமாவிற்கு வநது, சினிமாவில் தான் சந்தித்த பிரச்சனை, பெரிதாக புகழ் பெறாதது, அம்மா, தங்கை அன்பு என உணர்ச்சிகரமாக பேசி கண்ணீர் வடித்தார்.

இதையடுத்து, அவர் ஏற்கனவே ஓவியா பேசியதையெல்லாம் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறார். எனவே, ரசிகர்களின் ஆதரவை பெறவே அவர் ஓவியாவை போல் உணர்ச்சிகரமாக பேசி, அவரை அப்படியே காப்பியடிக்கிறார் என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே, சமீபத்தில் ரைசா, வையாபுரி, பிந்து மாதவி ஆகியோரிடம் அவர்கள் விளக்கம் கொடுத்த பின்பும் மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்டு  எரிச்சலை உண்டாக்கினார். எனவே, இவருக்கு ஜூலி எவ்வளவோ பரவாயில்லையே என பலரும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com