தினகரன் பணத்தில் குளித்த பாலிவுட் நடிகைகள்: அதிர்ச்சி தகவல்

New Delhi: Officials of Delhi Police Crime Branch escort Sukesh Chandra, the middleman accused of receiving a bribe after promising to retrieve the party symbol for AIADMK, in New Delhi on Monday. PTI Photo (PTI4_17_2017_000182B) *** Local Caption ***

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் தரகர் சுகேஷ் சந்திரா கைது செய்யப்பட்ட சில நாட்களில் டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டு இருவரும் விசாரணையின் பிடியில் உள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தினகரனின் கோடிக்கணக்கான பணத்தில் பாலிவுட் நடிகைகள் குளித்து கொண்டாடிய அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சமாக தினகரன் கொடுத்த பணத்தை பெற்ற சுகேஷ், அந்த பணத்தின் ஒரு பகுதியை பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க செலவு செய்ததாகவும், இதனால் பல நடிகைகளின் கையில் லட்சக்கணக்கிலும், சில நடிகைகளுக்கு கோடிக்கணக்கிலும் பணம் கிடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த நடிகைகளும் தற்போது விசாரணையின் பிடியில் இழுத்து வரப்படுவார்கள் என்ற செய்தால் சம்பந்தப்பட்ட நடிகைகள் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.