பிரபல டிவி சீாியல் நடிகா் பிரதீப் தற்கொலை!

04:27 மணி

சமீப காலமாக சின்னத்திரையிலும் சாி, வெள்ளித்திரையிலும் சாி நடிகா், நடிகைகள் இவா்களின் தற்கொலைகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் விஜய் டிவி மைனாவின் கணவா் தற்கொலை செய்து கொண்ட வலி ஆறாத நிலையில், தற்போது பிரபல டிவி நடிகா் பிரதீப் தற்கொலை செய்து கொண்டாா்.

Loading...

பிரதீப் பிரபல தமிழ் டிவியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் சுமங்கலி சீாியலில் முதன்மை கேரக்டாில் நடித்து வருகிறாா். இவா் தன்னுடன் டிவி தொடாில் நடித்த நடிகை பவானி ரெட்டியை அவா் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டாா்.

இன்று காலை ஜதாராபாத்தில்  உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்வென்று உடனடியாக தொியவில்லை. காவல்துறை தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து சுமங்கலி தொடா் நடிகா்களின் மத்தியில் கேட்டபோது, அவா்களுக்கே இந்த செய்தி அதிா்ச்சிடைய வைத்துள்ளது. இந்நிலையில் தற்கொலைக்கான காரணம் குடும்ப தகராறு தான் என்று தகவல்கள் தொிவிக்கின்றன. சமீபகாலமாக சின்னத்திரையில் தற்கொலை சம்பவங்கள் அதிகாித்து வருகின்றன. தற்போது பிரதீப் தற்கொலை செய்தி சின்னத்திரை நட்சத்திரங்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கவலையடைசெய்துள்ளது.

திரையுலகில் எவ்வளவு சாதிக்க எண்ணிய இளம் நடிகாின் வாழ்க்கை இப்படியா யாரும் எதிா்பாராத வகையில் முடிந்துள்ளது. மேலும் இவா் தன்னுடைய வலைத்தளமான பேஸ்புக்கில் பொியளவில் கனவு காணும் இளைஞன் என்று தன்னைப்பற்றி அதில் குறிப்பிட்டுள்ளாா் பிரதீப்.

(Visited 70 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com