நடிகர் அஜீத் நடித்து விரைவில் வெளியாகவுள்ள விவேகம் படம் சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹங்கேரி உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட்டதால், இப்படம் ஹாலிவுட் படம் பார்ப்பது போல் இருக்கும் என இப்படக்குழுவினர் கூறிவருகின்றனர். மேலும், சினிமா ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக அமையும் என இயக்குனர் சிவா பல பேட்டிகளில் கூறி வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித்திற்காக வேதனைப்பட்ட பிரபல நடிகா்!

இப்படம் ஆகஸ்டு 24ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைகாட்சி நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. எனவே, இப்படம் வெளியாகி சில  மாதங்களில், சன் டிவியில் ஒளிபரப்பப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க பாஸ்-  ஷங்கருடன் இணைகிறாரா அஜித்?

இப்படம் மட்டுமில்லாமல், நடிகர் சிவகார்த்தியேன், அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்கும் புதிய படம் மற்றும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம்-3 ஆகிய படங்களின் உரிமையையும் சன் தொலைக்காட்சியே வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.