ரஜினிகாந்தை வைத்து முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்க சன் புரடெக்‌ஷன் மறுத்துவிட்டது.

சர்கார் படக்கதையை முருகதாஸ் வேறு ஒருவரிடமிருந்து திருடி எடுத்துவிட்டர் என பஞ்சாயத்து எழுந்தது. எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜும் சர்கார் படத்தின் கதையை வெளியிட சினிமா உலகில் அது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் அந்த உதவி இயக்குனரை பாராட்டி படத்தின் தலைப்பில் கார்டு போடப்பட்டது.

இந்த விவகாரம் சன் நிறுவனத்திற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. ரஜினியை வைத்து அடுத்து முருகதாஸ் எடுக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், சர்கார் பிரச்சனையால் ஏற்பட்ட மனக்கசப்பில் சன் பிக்சர்ஸ் இதிலிருந்து விலகி விட்டது. எனவே, இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது.