சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்தின் உலகம் முழுவதுமான ரிலீஸ் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி விலைக்கு பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சாதாரண நடிகர்கள் நடிக்கும் படத்தையே பெரிய அளவில் புரமோட் செய்யும் சன் பிக்சர்ஸ் வெளியீட்டு உரிமையில் இருந்து விலகியது பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
இருந்தாலும் பாரளுமன்ற தேர்தல் வரும் நேரம் என்பதால். படத்தில் சில அரசியல் வசனங்கள் காரசாரமாக இருப்பதாலும் தங்களின் கட்சியான திமுகவுக்கோ அல்லது வேறு ஏதாவது எதிர்வினைகளோ வந்து பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் எதுவும் பிரச்சினைகள் ஆகிவிட வேண்டாம் என்று சன் பிக்சர்ஸ் கொஞ்சம் இந்த முறையை கையாண்டிருப்பதாக கூறப்படுகிறது.