ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பல
நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் சர்கார் படத்தின் டீசர் உலகளவில் பெரும் சாதனையை படைத்தது. இதனையடுத்து, ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்கார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், சன்பிக்சர்ஸ் நிறுவனம் டிவிட்டரில் சர்கார் படத்தின்
அப்டேட்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கொண்டாட தயாராகுங்கள் சர்கார் தீபாவளி என்று விடியோ ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.