சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களின் படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து சாதனை செய்தவர் கலைப்புலி எஸ்.தாணு. இவர் தயாரித்த கபாலி, தெறி ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்

இந்த நிலையில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதேபோல் ரஜினி-விஜய் படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கின்றது. விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் படம், ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படம் என ஒரே நேரத்தில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இரண்டு படங்களின் பட்ஜெட்டை கணக்கு போட்டு பார்த்தால் ரூ.400 கோடியை நெருங்கிவிடும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.