Kaappaan Movie – நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்தின் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

சூர்யாவை வைத்து அயன் மற்றும் மாற்றான் ஆகிய திரைப்படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த் இயக்கியுள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தில் சூர்யாவோடு மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அரசியல் கலந்த திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பாற்றியுள்ளது. இதை சன் டிவி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள காப்பான் திரைப்படம் வருகிற ஆகஸ்டு 31ம் தேதி வெளியாகவுள்ளது.