அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டன

இந்த நிலையில் சன் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மார்ச் இறுதியில் இந்த படம் வெளியானால் ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் சன் டிவியில் ஒளிபரப்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

அருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல், சாயாசிங், சுஜா வருனே, ஜான் விஜய், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் CS இசையமைத்துள்ளார். சான் லோகேஷின் படத்தொகுப்பில், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில்’ உருவாகியுள்ள ‘இரவுக்கு ஆயிரம் கண்கள் ஒரு திகில் படம் என்பது குறிப்பிடத்தக்கது