தனுஷ்-கவுதம் மேனன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நாயகி

11:12 காலை

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை சுனைனா தற்போது இணைந்துள்ளார்.

Loading...

பொதுவாக கவுதம் மேனன் படத்தின் நாயகிகளுக்கு கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இதை போலவே இந்த படத்தில் சுனைனாவுக்கு அழுத்தமான ஒரு நெகட்டிவ் வேடம் என்றும் இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் சுனைனா கோலிவுட்டில் மீண்டும் ரவுண்டு வருவார் என்றும் கூறப்படுகிறது.

நடிகை சுனைனா விஜய்யின் ‘தெறி’, சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’ ஆகிய படங்களை அடுத்து தற்போது தனுஷ்-கவுதம் மேனன் படத்தில் இணணந்துள்ளார். மேலும் அவர் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393