ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா நடில்லில் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘கலகலப்பு 2’ . இந்த படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் திரையுலகின் வேலைநிறுத்தம் வந்ததால் இந்த படம் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. இதனால் இந்த படம் நல்ல லாபத்தை பெற்றதாக கூறப்பட்டது.

ஆனால் கலகலப்பு 2 படத்தால் தனக்கு திரையரங்கங்களிலிருந்து எந்தவித லாபமும் வரவில்லை என்றும், வெறும் கணக்கு பேப்பர் மட்டுமே திரையரங்கு உரிமையாளர்கள் தந்ததாகவும், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி சமீபத்தில் விஷாலை சந்தித்தபோது கூறி வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை கேட்டு வருத்தமடைந்த விஷால், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என்று உறுதிபட கூறியுள்ளார்.