பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் ஓவியா. இந்த நிகழ்ச்சிக்கு பின் அவரை தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய பல இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் கூட அந்த லிஸ்டில் உண்டு என்கிறார்கள். தற்போது சுந்தர்.சி.யும் இணைந்துள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு. காமெடிக்காகவே மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்த படம். இதில் ஓவியா கொஞ்சம் கிளாமர் தூக்கலாகவே நடித்திருப்பார். சுந்தர்.சி படம் என்றாலே ஹீரோயின்கள் கிளாமராகத்தானே நடிப்பார்கள்.

இந்த நிலையில் சுந்தர்.சி கலகலப்பு 2 எடுக்க முடுவு செய்துள்ளதாக கூறப்படுகிரது. சங்கமித்ரா பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவந்தாலும் ஹீரோயின் கிடைக்காததால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறார். இதனால் கலகலப்பு பார்ட் 2 எடுக்க உள்ளாராம். முதல் பாகத்தில் நடித்த ஓவியாவிற்கு தற்போது கிடைத்துள்ள புகழும் ஒரு காரணம் என்கிறார்கள் சிலர். ஓவியாவிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.