கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிவந்த கலகலப்பு படத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம் காமெடியில் மெகா ஹிட் அடித்தது. இதை சுந்தர் சி இயக்கியிருந்தார். அதன் பின் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார் சுந்தர்.சி. சில தினங்களுக்கு முன் வெளியான கலகலப்பு 2 முதல் பாகத்தைப் போல இதுவும் வெற்றி பெற்றுள்ளது. வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழுவினா் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனா்.

இயக்குநா் சுந்தர்.சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொண்டு பேசும் போது, இந்த படத்தின் அடுத்தப்பாகம் தொடரும் என்று கூறியுள்ளார். இதிலிருந்து விரைவில் சுந்தர் சி கலகலப்பு 2 படம் வெற்றி பெற்றதை தொடா்ந்து அடுத்த பாகத்தை எடுக்கும் முடிவு செய்துள்ளார் என்பது தெரிகிறது. இதிலும் அதே நடிகா்கள் ஜீவா, ஜெய் மற்றும் ரசிகா்களின் மனத்தை கவா்ந்த சிவாவும் நடிப்பார்களாம் என்று கூறப்படுகிறது.