முடிவுக்கு வந்தது பிரபல இயக்குனரின் கலகலப்பு

விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த கலகலப்பு’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து, இந்த படத்தின் இயக்குனர் சுந்தர் சி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘கலகலப்பு 2’ படத்தை தொடங்கினார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. மேலும் உடனே போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, சதீஷ், வையாபுரி, மனோபாலா, ரோபோசங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்