‘ஸ்கீரன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பில்
சுந்தர்.சி. ஹீரோவாக நடிக்கும் படம் ‘இருட்டு’. பிரபல
எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் வசனம்
எழுதியுள்ளார்.

இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கௌதம்
வாசுதேவ் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில்
வெளியிட்டுள்ளார்.

படத்தில் சுந்தர்.சி உடன் முக்கிய கதாபாத்திரங்களில்
தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு
ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை துரை இயக்கவுள்ளார். இவர் ‘முகவரி’, ‘தொட்டி
ஜெயா’, ‘நேபாளி’, ‘6 மெழுகு வர்த்திகள்’ உள்ளிட்ட
படங்களை இயக்கியவர்.

இந்த படத்துக்கு கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துளார்.
கிரிஸ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இவர்
‘மெரினா’, ‘விடியும்முன்’ உள்ளிட்ட படங்களுக்கு
இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், வெளியான இந்த படத்தின் ஃபஸ்ட் லுக்
போஸ்டரிலிருந்து இது திரில்லர் அல்லது ஹாரர் படமாக
இருக்கலாம் எனக் கூறப்பட்டது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சுந்தர்.சி மீண்டும்
நடிப்பதால், ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு
ஏற்பட்டுள்ளது.