விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுனிதா, குடி போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்பத்தி பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ குறித்து அவர் தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

சுனிதா வேலூரில் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. குடித்துவிட்டு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்பத்தியதாக சுனிதாவை பொதுமக்கள் திட்டியது போல காட்கள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது.

இதையும் படிங்க பாஸ்-  பியார் பிரேமா காதல்: நாளைக்கு இருக்கு கச்சேரி

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுனிதா, நான் குடித்துவிட்டு கார் ஓட்டவில்லை. எனக்கு காரே ஓட்டத் தெரியாது. லைசென்ஸ் கூட கிடையாது. என்னுடைய டிரைவர்தான் காரை ஓட்டிவந்தார். நான் பின் சீட்டில் நன்றாக தூங்கிக்கொண்டு வந்தேன்.

இதையும் படிங்க பாஸ்-  போட்டி தொலைக்காட்சிக்கு டிடி மாறிய ரகசியம் இதுதான்

இந்த விபத்தில் இரண்டு வண்டிகளும் சேதமடைந்தன. எனது டிரைவர் மீதுதான் தவறு. நான் காரில் இருந்து இறங்கியதும் அங்கிருந்த மக்கள் என்னை தவறாக பேசினர். ஆனால் எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது என்பதால், அதற்கு பதிலளிப்பது எப்படி என்றுகூடத் தெரியவில்லை. அவர்கள் பேசியது கொஞ்சம் தான் புரிந்தது, ஆனால் அதுவே எனக்கு வருத்தமாக இருந்தது. மொழி புரியாததால் அவர்களுக்குச் சரியாக விளக்கம் அளிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.