அப்படி என்ன செய்தார் சன்னி லியோன்?

சன்னி லியோனைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. கவர்ச்சி காட்டுவதில் இவர் தாராளம். அறிமுகமான சிறிது காலத்திலியே பாலிவுட்டின் முன்னணி ஸ்டார் படங்களில் நடித்துவிட்டார். இவர் எது செய்தாலும் ஊடகங்கள் அதை ஒரு செய்தியாக பேசம் அளவிற்கு புகழின் உச்சியில் இருக்கும் இவர் சமீபத்தில் செய்த செயலுக்காக பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அப்படி என்ன செஞ்சுட்டார் அம்மணி?

இவரும் கணவர் டேனியல் வெபரும்,குழந்தைத் தத்தெடுப்பு அமைப்பு மூலம் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளனர்.அவரின் இந்த செயலுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதைப் பற்றி அந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் குமார் கூறுகையில், “குழந்தையின் நிறம், பின்னணி, உடல் ஆரோக்கிய நிலை என்று எதையும் பார்க்காமல் சன்னிகுழந்தையை மகிழ்ச்சியுடன் தத்தெடுத்துக்கொண்டார். விதியை மீறாமல் சக பெற்றோர்களைப் போல வரிசையில் பொறுமையுடன் காத்திருந்தை மதிக்கிறோம்”

அம்மணிக்கு ரொம்ப நல்ல மனசு.