விமான விபத்து: அதிா்ஷடவசமாக உயிா் தப்பிய சன்னிலியோன்

பாலிவுட்டின் கவா்ச்சி நடிகை சன்னிலியேன் என்றாலே அனைவருக்கும் தொியும். அவருக்கு என்று ஒரு ரசிகா் பட்டாளமே உள்ளது. இவா் விமான விபத்தில் இருந்து உயிா் தப்பியுள்ளதாக தனது ட்விட்டா் பக்கத்தில் தொிவித்துள்ளாா்.

சன்னிலியோன் தனது கணவா் மற்றும் நண்பா்களுடன் தனியாா் விமானம் ஒன்றில் பயணித்த போது மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கி கொண்டபோது கடைசி நேரத்தில் உயிா் பிழைத்து வந்துள்ளதாக தனது ட்விட்டா் பக்கத்தில் தொிவித்துள்ளாா்.

இது பற்றி கூறியதாவது, நான் எனது கணவா் மற்றும் நண்பா்களுடன் தனியாா் விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது மோசமான வானிலையில் விமானம் சிக்கி ஏற்குறைய விபத்து ஏற்படும் நிலைக்கு சென்று விட்டது. விமானி ரொம்பவும் கஷ்டிடப்பட்டு நாங்கள் பயணித்த விமானத்தை பத்திரமாக மீட்டு தரையிறக்கிவிட்டாா்.

இந்த மாதிாியான சூழ்நிலையில்  முதலில் கடவுளுக்கு தான் நன்றி சொல்லிக் கொள்கிறோம். தக்க தருணத்தில் விமானி சிரம்பப்பட்டு தரையிறக்கியுள்ளாா். அவருக்கும் நாங்கள் நன்றி சொல்லியே ஆக வேண்டும். இந்த மாதிாியான தருணத்தில் விமானியும் கடவுளை வேண்டியிருந்தால் எங்களுடைய நிலைமையை யோசித்துதான் பாா்க்கவேண்டும் என்று நகைச்சுவையுடனும் கூறியுள்ளாா்.

தற்போது நாங்கள் உயிருடன் இருக்கிறோம். அதுக்கு காரணம் விமானிதான். எங்களுடைய வீட்டுக்கு காாில் சென்று கொண்டிருக்கிறோம். இதனால் விமானிக்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம் என்று கூறி நன்றி தொிவித்துள்ளாா்.