நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அயோக்யா’ இந்த படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாட நடிகை சன்னி லியோன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்தியில் தற்போது வளர்ந்து வரும் நடிகை சன்னி லியோன்.இவர் இப்போது கதாநாயகியாக தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் ‘வீரமாதேவி’ என்னும் சரித்திர படத்தில் சன்னிலியோன்  நடித்து வருகிறார்.மேலும் இப்படத்திற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடக்கின்றன.தடைகளைத் தாண்டி இப்படம் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

தமிழில் இதற்கு முன் சன்னிலியோன் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான ‘வடகறி’ படதில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடினார்.இந்த நிலையில் தமிழில் அடுத்து இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கும் விஷாலின்’அயோக்கியா’ என்ற படத்தில் சன்னிலியோன் ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சன்னிலியோனின் தமிழ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.