கடந்த ஆண்டு சன்னி லியோனின் நிகழ்ச்சி ஒன்று பெங்களூருவில் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு தீவிர கன்னட அமைப்பான கன்னட ரக்சன வேதிகே அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சன்னி லியோனின் நிகழ்ச்சி கலாச்சார ரீதியாக இருக்காது என எதிர்ப்பு தெரிவித்தார்கள். பாலிவுட் பிரபலங்கள் யாருமே நிகழ்ச்சி நடத்த கூடாது எனவும் அறிவித்தனர். கடந்த ஆண்டு சன்னியின் புத்தாண்டு டான்ஸ் விழாவை தடுத்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  இப்போது இந்த கவர்ச்சி தேவையா? - சமீரா ரெட்டியை விளாசிய நெட்டிசன்கள்

இப்போது அவர்களின் நிலைப்பாட்டினை கொஞ்சம் மாற்றியுள்ளனர். அதில் கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் அறிவுரைக்கிணங்க ஆபாசம் அதிகம் இல்லாமல் கலாச்சார ரீதியான நடனங்கள் நிகழ்ச்சிகள் அதிகம் இருக்க வேண்டும் என்பதை ஏற்று இப்போது கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் சன்னி லியோனின் ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  வயதான கிரிக்கெட் வீரருடன் நடிகைக்கு காதலா?

வரும் நவம்பர் மாதம் நடக்கும் அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனின் 3நடனம் இடம்பெறுகிறது. ஆனால் அவர் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் என்பது உண்மை. கலாச்சார ரீதியான சன்னி லியோனின் நடனத்திற்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர் அந்த அமைப்பினர்.