கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

இந்த நிலையில் தற்போது தமிழ்ப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்க புக் ஆகியுள்ளார். இயக்குனர் வடிவுடையான இயக்கவுள்ள சரித்திர சம்பவங்கள் நிறைந்த இந்த படத்தில் சன்னிலியோன் முதல்முறையாக இளவரசி கேரக்டரில் நடிக்கின்றார்.

இந்த படத்திற்காக அவர் ஆறு மாதம் குதிரைப்பயிற்சி மற்றும் வாள்பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகவும், அதன்பின்னரே படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த படம் சன்னிலியோனின் திரையுலகில் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது