பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் பழம்பெரும் நடிகை ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

பாலிவுட்டில் கடந்த 60கள், 70களில் புகழ்பெற்று விளங்கிய நடிகை மீனாகுமாரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தான் சன்னிலியோன் நடிக்கவுள்ளாராம். மீனாகுமாரி கேரக்டருக்கு சன்னிலியோனை விட பொருத்தமானவர் இருக்க முடியாது என்று இந்த படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

முன்னதாக மீனாகுமாரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் வித்யாபாலன் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது சன்னிலியோன் ஒப்பந்தமாகியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது