சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பேட்ட படத்தில் நவாஸுதின் சித்திக் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாஸுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் ‘மரண மாஸ்’ பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நேற்று சன் பிக்சர்ஸ் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயரை(ஜித்து) அறிவித்தது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்திருக்கும் நவாஸுதின் சித்திக்கின் கேரக்டர் பெயரை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அவரது பெயர் சிங்கார் சிங். இப்படத்தில் மிரட்டலான நடிகர், நடிகைகள் இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.