super deluxe movie: விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பில் உருவான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் நேற்று வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுவருகிறது. 2011ம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் மூலம் கவனம் ஈர்த்த தியாகராஜன் குமாரராஜா அடுத்து இயக்கியுள்ள இப்படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் அனைவருமே வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளனர்.ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரே இப்படத்தை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக விஜய் சேதுபதியின் நடிப்பை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி கேரக்டருக்கு முதலில் பேசடப்பட்டவர் வேறு நடிகராம். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா முதலில் இந்த கேரக்டருக்கு நடிகர் சிவகார்த்திகேயனிடம்தான் பேசினாராம். ஆனால் எதோ காரணத்தால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது படம் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் இந்த நிலையில் இந்த கேரக்டரை ஏன் நாம் மிஸ் செய்தோம் என்று சிவகார்த்திகேயன் வருந்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.