விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் விரைவில் இந்த நிகழ்ச்சியின் 6ஆம் பகுதி ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிலையில் முதல் ஐந்து பகுதிகளை தொகுத்து வழங்கிய பிரபல தொகுப்பாளினி பாவனா, 6ஆம் பகுதியில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும், இருப்பினும் இதில் கலந்து கொள்பவர்கள் மற்றும் இசை ரசிகர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் பாவனா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.