சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ டீம் இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 164வது திரைப்படமான ‘காலா கரிகாலன்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் மும்பையில் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த முழுதகவல் அடங்கிய செய்திக்குறிப்பு ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். இவர்களுடன், ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உட்பட மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணையும் நான்காவது படம் இது. மேலும் இந்த படத்தின் பாடல்களை கபிலன், உமாதேவி ஆகியோர் எழுதுகின்றனர். மெட்ராஸ், கபாலி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி, இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் இந்த படத்தின் டெக்னிஷியன்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:
கலை இயக்கம் – டி.ராமலிங்கம்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
சவுண்ட் டிசைனர் – ஆண்டனி பி ஜெயரூபன்
கிரியேட்டிவ் டிசைனர் – வின்சி ராஜ்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
நடனம் – சாண்டி
ஆடை வடிவமைப்பு – அனு வர்தன், சுபிகா
காஸ்ட்யூம்ஸ் – செல்வம்
ஒப்பனை – பானு பாஷ்யம், ராஜா
ஸ்டில்ஸ் – ஆர்.எஸ்.ராஜா
நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.வினோத்குமார்
தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், ஆர். ராகேஷ்

மும்பையில் 40 நாட்களும் அதன்பின்னர் சென்னையில் 20 நாட்களும் என மொத்தம் 60 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.