கடந்த வெள்ளியன்று வெளியான அருவி படத்திற்கு விஜய் ரசிகர்களும், விஜய்யை நம்பி வாழும் ஒருசில புரமோட்டர்களும் மட்டுமே குறை கூறி வருகின்றனர். இவர்கள் ஏன் குறை கூறி வருகின்றனர் என்பது படம் பார்த்தவர்களுக்கு விளங்கும்

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் எதிர்க்கும் இந்த படத்தை நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியுள்ளார். அருவி இயக்குனர் அருண்பிரபுவை தொலைபேசியில் அழைத்து படத்தை பற்றி ஆஹா ஓஹோ என புகழ்ந்ததாகவும், சுமார் அரை மணி நேரம் இந்த படம் குறித்து ரஜினிகாந்த் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அருவி இயக்குனர் அருண்பிரபு தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உச்சம் தொடும் அன்பின் கொடி. ஆம். ஒரு தொலைபேசி அழைப்பு. திரு. ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார்.