புதுச்சேரியில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட 3 எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும், துணை ஆளுநர் கிரன்பேடிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு 3 நியமன எம்.எல்.ஏக்களை கிரண்பேடி நியமித்தார். ஆனால், அதை புதுச்சேரி முதல்வரும், சட்டசபை சபாநாயகரும் ஏற்கவில்லை.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் என தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் கிரண்பேடியின் நியமித்த 3 எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் என அதிர்அடி தீர்ப்பை அளித்துள்ளது.