கமலஹாசன் நடித்த பட்டாம்பூச்சி பிரபு நடித்த இவர்கள் வருங்கால தூண்கள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ரகுநாதன். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் தயாரித்துள்ள படம் மரகதக்காடு. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், கமல்ஹாசனை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பாக்கியம் பெற்றவர் ரகுநாதன்.கமர்ஷியலாக இல்லாமல் சமூக நோக்கத்திஉடன் படம் தயரித்து வரும் ரகுநாதனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


இப்படத்தின் பர்ஸ்லுக்கை கமலை கொண்டு வெளியிடப் வேண்டும் என்று விரும்பிய ரகு நாதன் தொடர்பு கொண்டார்.இரண்டு முறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் கடைசி வரை பதில் வரவில்லை. முதலில் உங்கலை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரை பாரட்ட வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. நீங்க கட்சி ஆரம்பிங்க, மக்களூக்கு நல்லது செய்யுங்க., ஆனால் முதலில் உங்கள் கூட இருப்பவர்களுக்கு நல்லது செய்யுங்கள், பிறகு நாட்டிற்கு செய்யுங்கள் என்று கூறினார்.