பொங்கல் அன்று வெளியான படங்களில் தானா சேர்ந்த கூட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. சூர்யா நடித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் நடித்துள்ளார்.இந்த படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றுள்ளது. ஆனால் சுரேஷ் மேனன் இந்த படக்குழுவினர் மீது மன வருத்தத்தில் உள்ளார். காரணம் அவரது குரலுக்கு பதில் டப்பிங் வாய்ஸ் பயன்படுத்தியதே. இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் தனது வருத்ததை தெரிவித்துள்ளர். அவர் கூறியதவது:-

இந்த படத்தில் முழுக்க முழுக்க நான் டப்பிங் பேசிகொடுத்துள்ளேன் ,ஆனால் படத்தில் என்னுடைய குரலை நீக்கிவிட்டு இயக்குனர் கௌதம் மேனன் குரலை வைத்துள்ளார்கள். ஏன் என் குரல் நன்றாகத்தானே இருக்கிறது. பிறகு ஏன் அதை மாற்றினார்கள்?
என்று கூறியுள்ளார்.

மேலும் அவரின் சொந்த குரலில் பேசி நடித்துள்ள ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு அதில் ரசிகர்கள் இதை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார்.