துக்க வீட்டில் சிரித்தபடி செல்பி எடுத்த முன்னணி நடிகர்: வறுத்தெடுத்த ரசிகர்கள்

suresh goip

மலையாள திரையுலகில் பிரபல நடிகர்களில் முக்கியமானவர் சுரேஷ் கோபி. பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவர் தமிழில் ஐ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்ட அபிமன்யூ என்ற மாணவர் இல்லத்துக்கு நடிகரும், பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபி ஆறுதல் கூற சென்றார். அப்போது அங்கு ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்தனர். அப்போது அவர்களுடன் மகிழ்ச்சியாக செல்பி எடுத்தார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதனைக் கண்ட மக்கள், ஒரு துக்க வீட்டிற்கு சென்ற இவர் இப்படியா மகிழ்ச்சியா செல்பி எடுப்பது என்று கருத்துக்களால் வறுத்து எடுத்தனர்.