அஜித்தின் முக்கிய ரகசியத்தை கண்டுபிடித்த சுரேஷ் மேனன்

கோலிவுட் திரையுலகில் அஜித் இன்று உச்சத்தில் இருந்தாலும் தல’க்கணம் இல்லாதவராக இருக்கின்றார் என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது. பணம், செல்வாக்கு, புகழ் வந்துவிட்டால் மனிதர்களுக்கு சாதாரணமாகவே தலக்கணமும் வந்துவிடும் நிலையில் தல அஜித் மட்டுமே எப்படி அப்படியே எளிமையாக உள்ளார் என்பது அனைவருக்கும் புரியாத ரகசியமாக இருந்தது.

இந்த நிலையில் தல அஜித்தின் இந்த ‘தல’க்கண’ ரகசியத்தை கண்டுபிடித்துவிட்டதாக பிரபல இயக்குனரும் நடிகருமான சுரேஷ்மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அஜித்தின் பெற்றோரை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அவர்களை சந்தித்த பின்னர், அஜித் தலக்கணம் இல்லாமல் இருப்பதற்கான காரணம் புரிந்ததாகவும், அஜித்தின் பெற்றோர் அந்த அளவுக்கு எளிமையாக இருந்ததாகவும் சுரேஷ் மேனன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் தான் 25 ஆண்டுகளுக்கு முன்னர் அஜித்துடன் இணைந்து பணிபுரியும் போது எப்படி கனிவான, எளிமையான, அன்பான நபராக இருந்தாரோ, அதே போல் இன்று உச்சத்தில் இருக்கும்போது இருக்கின்றார் என்றும், கூறினார். அஜித் கடந்த 1990-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுரேஷ் மேனன் இயக்கிய விளம்பர படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது