சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ ரசிகர்களின் மாபெரும் பெற்றதோடு, 50 நாட்கள் என்ற மைல்கல்லையும் திரையரங்குகளில் பெற்றது. பெரும் நட்சத்திர கூட்டம், விறுவிறுப்பான திரைக்கதை, அனிருத்தின் இசை ஆகியவை இந்த படத்தின் பலம் ஆகும்

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த டுவிட்டர் உரையாடலில் சூர்யாவும், விக்னேஷ் சிவனும் மீண்டும் இணையவுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த முறை ரீமேக் படமாக இல்லாமல் விக்னேஷ் சிவனின் ஒரிஜினல் ஸ்கிரிப்டில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் விக்னேஷ் சிவன் தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் பிசியாக உள்ளார். இருவரும் தங்களின் தற்போதைய பணிகளை முடித்தவுடன் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது