காப்பான் படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா பிரியாணி விருந்து கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா ஏற்கனவே அயன் மற்றும் மாற்றன் என 2 படங்களில் நடித்துள்ளார். தற்போது காப்பான் படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார். மேலும், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் மோகன்லால் தொடர்பான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டன.

இந்நிலையில், காப்பான் படக்குழுவினர் அனைவருக்கும் சூர்யா இன்று பிரியாணி விருந்தளித்தார். இது தொடர்பான புகைப்படங்களை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிருந்து வருகின்றனர்.