போதை ஏறி புத்தி மாறி எனும் த்ரில்லர் படத்தின் மிரட்டலான டீசரை நடிகர் சூர்யா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

புதுமுக நடிகரான தீரஜ், துஷாரா, ராதாரவி, சார்லி மற்றும் பலர் நடிப்பில் போதை ஏறி புத்தி மாறி எனும் படம் ஸ்டோனர் த்ரில்லர் வகைப் படம் உருவாகியுள்ளது. நலன் குமாரசாமியிடம் சூது கவ்வும் படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த கதிர் நடராசன் திரைக்கதை வசனம் எழுதியுள்ள இந்தப்படத்தினை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கியுள்ளார்.  இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியமும் இசையமைப்பாளராக கே பி என்பவரும் பணியாற்ற ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் மூலம் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  இயல்பாவே இருங்க- சூரிக்கு அட்வைஸ் கொடுத்த அஜீத்

போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகளையும் உளவியல் பிரச்சனைகளையும் சொல்லும் இந்தப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா இன்று டிவிட்டரில் வெளியிட்டு உள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் சமூகவலைதளங்களில் வெகுவாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. அபி அண்ட் அபி நிறுவனம் மூலம் இந்த படத்தை அபினேஷ் இளங்கோவன். ஜூன் மாதம் வெளியிட இருக்கிறார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டீசரின் லிங்க்

இதையும் படிங்க பாஸ்-  நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது - சூர்யா பரபரப்பு பேச்சு

https://www.youtube.com/watch?v=jKmiPHNpdlg&feature=youtu.be