சூர்யா – ஹரி கூட்டணியில் வெளியாகி வெற்றிநடை போட்ட ‘சிங்கம்’, ‘சிங்கம்-2’ படங்கள் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தி ரீமேக்கில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த வருடம் இப்படங்களின் தொடர்ச்சியாக வெளிவந்த ‘சிங்கம்-3’ படத்தை இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள்.

இந்த படத்தின் ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளரும், தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘யான்’ படத்தை இயக்கியவருமான ரவி.கே.சந்திரன் இயக்கவிருக்கிறார். சூர்யா நடித்த துரை சிங்கம் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிக்கவிருக்கிறார். மேலும், ‘சிங்கம்-3’ யில் வில்லனாக கலக்கிய தாகூர் அனுப் சிங் இந்தி ரீமேக்கிலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் பிற கதாபாத்திரங்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூடவே, படத்திற்கான தலைப்பையும் தேர்வு செய்து வருகிறார்கள். கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி.கே.சந்திரன் இயக்கும் முதல் இந்தி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.