‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தினை தொடர்ந்து சூர்யா நடித்து வரும் படம் ‘என்கேஜி’. இப்படத்தினை செல்வராகவன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தினை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து ‘ட்ரீம் வாரியர் பிசக்ர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான
எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பளார் எஸ்.ஆர்.பிரபு,“சூர்யா 37வது படத்தின் படப்பிடிப்பு முடித்து சூர்யா அண்ணா வந்த பிறகு என்கேஜி
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நவம்பரில் துவங்கவிருக்கிறது. அதற்கு பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்க்ப்படும்” என தனது டிவிட்டர் பக்கத்தில்
குறிப்பிட்டுள்ளார்.