Suriya’s Soorarai Pottru : ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா கைவசம் ‘NGK, காப்பான், சூரரைப் போற்று’ என மூன்று படங்கள் உள்ளது. இதில் ‘சூரரைப் போற்று’ படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சூர்யா தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கும் இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது என்று நடிகை அபர்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.