என் கணவர் எனது நடிப்பு தொழிலில் தலையிட மாட்டார் என்றும், சக நடிகர்களுடன் முத்தக்காட்சியில் நடித்தாலோ அல்லது நிர்வாணமாக நடித்தாலும் அவர் ஒன்றும் சொல்ல மாட்டார் என்றும் நடிகை சர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்

பிரபல ஆங்கில பத்திரிகைக்கு அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது: எனது கணவர் தனது தொழில்முறை விருப்பங்களை ஆதரிக்கிறார். நான் என்னுடன் நடிக்கும் சக நடிகரை கிஸ் செய்தாலும். ஏன் நிர்வாணமாக நடித்தாலும்கூட என் கணவர் எதுவும் சொல்லமாட்டார். அந்தளவுக்கு அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அவர் என்னை புரிந்து வைத்து உள்ளார். அதனால் தான் அவரை திருமணம் செய்துகொண்டேன்”

சர்வீன் சாவ்லா தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2 ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இவை தவிர பல தெலுங்கு, இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது