பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா-கார்த்தி

01:02 மணி

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் திரையுலக வாரிசுகளான சூர்யா, கார்த்தி ஆகிய இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்க பல இயக்குனர்கள் முயன்று வரும் நிலையில் இந்த முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டார் பிரபல இயக்குனர் பாண்டிராஜ்,

ஆம், சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கார்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகை ஒருவர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் சூர்யாவும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தி தற்போது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் விஷாலுடன் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393