ஒரே ஒரு கண்ணசைவு மற்றும் புருவ நடனம் ஆகியவை அடங்கிய ஒருசில வினாடி அடங்கிய வீடியோவால் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ப்ரியாவாரியர். ‘ஒரு ஆடார் லவ்’ படத்தின் டீசர் ஏற்படுத்திய பரபரப்பு அனேகமாக வேறு எந்த பட டீசரும் ஏற்படுத்தியிருக்காது

இந்த நிலையில் ப்ரியாவாரியருக்கு தமிழில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால் முதல் படம் ரிலீஸ் ஆன பின்னர்தான் அவர் அடுத்த படத்தில் ஒப்பந்தமாக முடியும் என்ற நிலை அவருக்கு உள்ளதாம்

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் ப்ரியா வாரியரை நாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை முடியுந்தாருவாயில் இருப்பதாகவும் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.