முகப்பேரில் உள்ள டிவிடி கடைகளில் சிங்கம் 3 விற்பனையாவதை கண்ட நடிகர் சூர்யா, அங்கு ஆவேசமாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

சென்னை முகப்பேர் பகுதியில் ஒரு பேருந்தில் சூர்யா செல்வது போல் சில காட்சிகளை படப்பிடிப்பு குழுவினர் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது கிடைத்த இடைவேளையில், அருகில் சாலையோரங்களில் இருந்த டிவிடி கடைகள் மீது சூர்யாவின் பார்வை பட்டிருக்கிறது. அப்போது, சமீபத்தில் வெளியான பல புதிய படங்களின் டிவிடிகள் அங்கிருப்பதை அவர் பார்த்துள்ளார். உடனடியாக படப்பிடிப்பு குழுவினர் ஒருவரை அனுப்பி, சிங்கம் 3 படத்தின் டிவிடி இருக்கிறதா என கேட்க சொல்லியிருக்கிறார்.

அந்த நபரும் அங்கு சென்று கேட்ட 5.1 பிரிண்டே இருக்குது எனக் கூறிய அந்த டிவிடி கடைக்காரர், டிவிடியை எடுத்து கொடுத்திருக்கிறார். உடனே அங்கு சென்ற சூர்யா, அங்கிருந்த சிடிக்கள் அனைத்தையும் அள்ளி சாலையில் வீசிவிட்டு, அவரை அழைத்து ஏதோ திட்டியிருக்கிறார். அதன் பின் அவர் மீண்டும் பேருந்திற்கு சென்றுவிட்டார். சூர்யாவை பார்த்த அதிர்சியில் அந்த டிவிடி கடைக்காரார் சாலையில் சிதறிய டிவிடிக்களை அள்ளிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டாராம்.