சன் மியூசிக் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவின் உயரம் குறித்து தரம் தாழ்ந்த விமர்சனம் ஒன்று வெளியான நிலையில் சன் டிவிக்கு கோலிவுட் திரையுலகினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் இன்று காலை சுமார் 1000 சூர்யா ரசிகர்கள் சன் டிவி அலுவலகம் முன் கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சூர்யா தனது டுவிட்டரில், ‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற’ என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரையாக கூறியுள்ளார்.