கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலை குவித்து வருகிறது.

இந்த படத்திற்கு ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளதால் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் இதுவரை உலக அளவில் ரூ.70 கோடி வசூல் செய்துவிட்டதாகவும், இதே வேகத்தில் வசூல் குவிந்தால் இன்னும் ஒருசில நாட்களில் இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.